• May 10 2024

கார்த்திகை தீபம் - ஒளியேற்றுங்கள் வழி கிடைக்கும்.. இன்று இதை செய்தால் செல்வம் பெருகும்!

Chithra / Dec 7th 2022, 7:21 am
image

Advertisement

இறைவன் ஜோதி வடிவத்தில் நமக்கு அருள்கிறான் என்பதை உணர்த்துவதுதான் விளக்கு வழிபாடு. ஒளி வடிவத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டால் உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி பிறக்கும் நேர்மறை சக்தி அதிகரிக்கும். இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள். 

இந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி வைத்து இறைவனை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும்.


தீப வழிபாடு என்பது இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. பன்னெடுங்காலமாக, ஆதிகாலம் தொட்டே இருந்து வருகின்றன. திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. எந்த விழாவும் நடைபெறாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட விளக்கேற்றிதான் விழா நடத்துகின்றனர். விளக்கேற்றி வழிபட்டால் அது நம்முடைய கர்ம வினைகளை நீக்கும் அதற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும்.

பொதுவாகவே, தினமும் வீட்டில் விளக்கேற்றுவது சிறப்பு. தேவதைகளும் அஷ்டதிக் பாலகர்களும் நம் வீடுகளை காப்பதாக ஐதீகம். அதிலும் அதிகாலையிலும் சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களையும் கொடுக்கும். இல்லங்களில் நல்ல அதிர்வுகளைத் தரும். அதனால்தான் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர்.

விளக்கேற்றினால் புண்ணியம்


கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்கின்றனர். எந்த ஒரு பரிகாரம் என்றாலும் முதலில் கூறுவது குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும் என்றுதான். மாதந்தோறும் கோயில்களுக்கு விளக்குத் திரி மற்றும் நெய், நல்ல எண்ணெயை தானமாக வழங்குகின்றனர். இதுவும் நம் பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும்.

மன அமைதி தரும் விளக்கு

விளக்கு ஏற்றி வழிபட்டால் இல்லத்திலும் உள்ளத்திலும் நேர்மறை சக்தி அதிகரிக்கும். தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை தீபங்களை ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்கு ஏற்ற பலன்களும் புண்ணியங்களும் உண்டு. அகல் விளக்கு தீபம் ஏற்றும் பொழுது ஒவ்வொரு திரியைப் போட்டு ஏற்றக்கூடாது. இரட்டைத் திரிகளை ஒன்றாக திரித்து அதில் தான் தீபம் ஏற்ற வேண்டும். கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வழிபட்டால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும் அமைதியும் சாந்தியும் நிலவும்.

சர்வ சக்தி கிடைக்கும்


ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் நீங்கும் தீயசக்திகள் அண்டாது. 12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் அழியும். எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். 18 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்! தனம் தானியம் பெருகும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

காரிய வெற்றி உண்டாகும்

27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும். 48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். மனோபலம் பெருகும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடன் வம்ச விருத்தியுடன் வாழலாம்.

தீப திருநாள் விளக்கு


கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நம்முடைய வீட்டு முற்றத்தில் 4 விளக்கு, சமையல் கூடத்தில் 1 விளக்கு, நடையில் 2 விளக்கு, வீட்டின் பின்புறம் 4 விளக்கு, திண்ணையில் 4 விளக்கு, மாட குழியில் 2 விளக்கு, நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.

தோஷம் நீக்கும் விளக்கு வழிபாடு


தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. நம் வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றினால் பீடைகள் விலகும். வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும். பஞ்ச லோக விளக்கு ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்றினால் சனி தோஷம் விலகும்.

சிவ சக்தி அருள்


இன்றைய தினம் நம்முடைய வீட்டில் கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. தீபம் வைக்கும்போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

எந்த திரிக்கு என்ன பலன்


பஞ்சு திரி தவிர்த்து வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி, சிவப்பு திரி, மஞ்சள் திரி, பச்சை திரி, கருப்பு திரி, நீல திரி என்று விதவிதமான திரி வகைகள் உள்ளன. ஒவ்வொரு திரியும் வெவ்வேறு பலன்களை நமக்கு கொடுக்கும். இதில் சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால் கடன் தொல்லை தீரும் நினைத்த காரியம் கைகூடும். அதுபோல நீல திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சனி தோஷங்கள் விலகும். கருப்பு நிற திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும் விலகும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் - ஒளியேற்றுங்கள் வழி கிடைக்கும். இன்று இதை செய்தால் செல்வம் பெருகும் இறைவன் ஜோதி வடிவத்தில் நமக்கு அருள்கிறான் என்பதை உணர்த்துவதுதான் விளக்கு வழிபாடு. ஒளி வடிவத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டால் உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி பிறக்கும் நேர்மறை சக்தி அதிகரிக்கும். இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள். இந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி வைத்து இறைவனை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும்.தீப வழிபாடு என்பது இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. பன்னெடுங்காலமாக, ஆதிகாலம் தொட்டே இருந்து வருகின்றன. திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. எந்த விழாவும் நடைபெறாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட விளக்கேற்றிதான் விழா நடத்துகின்றனர். விளக்கேற்றி வழிபட்டால் அது நம்முடைய கர்ம வினைகளை நீக்கும் அதற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும்.பொதுவாகவே, தினமும் வீட்டில் விளக்கேற்றுவது சிறப்பு. தேவதைகளும் அஷ்டதிக் பாலகர்களும் நம் வீடுகளை காப்பதாக ஐதீகம். அதிலும் அதிகாலையிலும் சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களையும் கொடுக்கும். இல்லங்களில் நல்ல அதிர்வுகளைத் தரும். அதனால்தான் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர்.விளக்கேற்றினால் புண்ணியம்கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்கின்றனர். எந்த ஒரு பரிகாரம் என்றாலும் முதலில் கூறுவது குல தெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும் என்றுதான். மாதந்தோறும் கோயில்களுக்கு விளக்குத் திரி மற்றும் நெய், நல்ல எண்ணெயை தானமாக வழங்குகின்றனர். இதுவும் நம் பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும்.மன அமைதி தரும் விளக்குவிளக்கு ஏற்றி வழிபட்டால் இல்லத்திலும் உள்ளத்திலும் நேர்மறை சக்தி அதிகரிக்கும். தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை தீபங்களை ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்கு ஏற்ற பலன்களும் புண்ணியங்களும் உண்டு. அகல் விளக்கு தீபம் ஏற்றும் பொழுது ஒவ்வொரு திரியைப் போட்டு ஏற்றக்கூடாது. இரட்டைத் திரிகளை ஒன்றாக திரித்து அதில் தான் தீபம் ஏற்ற வேண்டும். கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வழிபட்டால் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும் அமைதியும் சாந்தியும் நிலவும்.சர்வ சக்தி கிடைக்கும்ஒன்பது தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் நீங்கும் தீயசக்திகள் அண்டாது. 12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் அழியும். எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். 18 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும் தனம் தானியம் பெருகும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.காரிய வெற்றி உண்டாகும்27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும். 48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். மனோபலம் பெருகும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடன் வம்ச விருத்தியுடன் வாழலாம்.தீப திருநாள் விளக்குகார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நம்முடைய வீட்டு முற்றத்தில் 4 விளக்கு, சமையல் கூடத்தில் 1 விளக்கு, நடையில் 2 விளக்கு, வீட்டின் பின்புறம் 4 விளக்கு, திண்ணையில் 4 விளக்கு, மாட குழியில் 2 விளக்கு, நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.தோஷம் நீக்கும் விளக்கு வழிபாடுதீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. நம் வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றினால் பீடைகள் விலகும். வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும். பஞ்ச லோக விளக்கு ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்றினால் சனி தோஷம் விலகும்.சிவ சக்தி அருள்இன்றைய தினம் நம்முடைய வீட்டில் கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. தீபம் வைக்கும்போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.எந்த திரிக்கு என்ன பலன்பஞ்சு திரி தவிர்த்து வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரி, சிவப்பு திரி, மஞ்சள் திரி, பச்சை திரி, கருப்பு திரி, நீல திரி என்று விதவிதமான திரி வகைகள் உள்ளன. ஒவ்வொரு திரியும் வெவ்வேறு பலன்களை நமக்கு கொடுக்கும். இதில் சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால் கடன் தொல்லை தீரும் நினைத்த காரியம் கைகூடும். அதுபோல நீல திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சனி தோஷங்கள் விலகும். கருப்பு நிற திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும் விலகும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement