• May 22 2024

விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை தாம் கோரவில்லை- விளக்கிய விக்கி!SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 4:38 pm
image

Advertisement

விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை தாம் கோரவில்லை என்றும் மாறாக நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டுமே பகிர்ந்து கேட்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையை சேர்ந்த ஊடகம் ஒன்று பல கேள்விகளை அவரிடம் முன்வைத்திருந்தது.

குறிப்பாக நீங்கள் கேட்பது புலிகள் கேட்ட தமிழீழம் போன்றதா என தென்னிலங்கை ஊடகம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

இல்லை. அவர்கள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம். அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள். அவை தனிநாடாகப் பிரியவில்லை. ஆனால், இந்த சமஸ்டி முறைமையை தனி நாடு என்றே எல்லோரும் எண்ணி அச்சப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பது ஏன்? என்றும் ஊடகம் மற்றுமொரு கேள்வியை எழுப்பியிருந்தது.

அங்கே சிங்கள பொலிஸார்தான் இருக்கின்றார்கள். இதனால் மொழிப் பிரச்சினை ஏற்படுகின்றது. ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று தமிழில் முறைப்பாடு பதிவு செய்கின்றபோது சிங்களத்தில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்வதாக தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன் இதனால் இவர் கூறிய அத்தனை விடயங்களும் திரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் முறைப்பாட்டாளர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை தாம் கோரவில்லை- விளக்கிய விக்கிSamugamMedia விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை தாம் கோரவில்லை என்றும் மாறாக நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டுமே பகிர்ந்து கேட்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தென்னிலங்கையை சேர்ந்த ஊடகம் ஒன்று பல கேள்விகளை அவரிடம் முன்வைத்திருந்தது.குறிப்பாக நீங்கள் கேட்பது புலிகள் கேட்ட தமிழீழம் போன்றதா என தென்னிலங்கை ஊடகம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.இல்லை. அவர்கள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம். அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள். அவை தனிநாடாகப் பிரியவில்லை. ஆனால், இந்த சமஸ்டி முறைமையை தனி நாடு என்றே எல்லோரும் எண்ணி அச்சப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.நீங்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பது ஏன் என்றும் ஊடகம் மற்றுமொரு கேள்வியை எழுப்பியிருந்தது. அங்கே சிங்கள பொலிஸார்தான் இருக்கின்றார்கள். இதனால் மொழிப் பிரச்சினை ஏற்படுகின்றது. ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று தமிழில் முறைப்பாடு பதிவு செய்கின்றபோது சிங்களத்தில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்வதாக தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன் இதனால் இவர் கூறிய அத்தனை விடயங்களும் திரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் முறைப்பாட்டாளர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement