• May 02 2024

எம்.பி. பதவியை இழக்கும் நசீர்...!அலி ஸாஹிர் மௌலானாக்கு அடித்தது அதிர்ஷ்டம்...! samugammedia

Sharmi / Oct 6th 2023, 4:52 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளதன் பிரகாரம் நசீர் அஹமட் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான புதிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.

இதை ஆட்சேபித்து அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (06) வழங்கப்பட்டிருந்தது.  

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.பி. பதவியை இழக்கும் நசீர்.அலி ஸாஹிர் மௌலானாக்கு அடித்தது அதிர்ஷ்டம். samugammedia ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து  அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளதன் பிரகாரம் நசீர் அஹமட் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிட்டுள்ளது.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான புதிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.கட்சியின் தீர்மானத்தை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் பட்ஜெட்டிற்கும் ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.இதை ஆட்சேபித்து அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று (06) வழங்கப்பட்டிருந்தது.   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement