• May 02 2024

12வருட இடைவெளிக்குப் பிறகு பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற லூலா!

Sharmi / Jan 2nd 2023, 1:08 pm
image

Advertisement

பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார்.

இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் தலைவரானார்.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றிய பின்னர் காங்கிரஸுக்கு ஆற்றிய உரையில், லூலா ஒக்டோபர் ஜனாதிபதி வாக்கெடுப்பின் உண்மையான வெற்றியாளர் என்று கூறினார்.

பழமைவாத முன்னாள் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மற்றும் பசி, வறுமை மற்றும் இனவெறி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தை மீட்பதற்கான போக்கில் கடுமையான மாற்றத்தை உறுதியளித்தார்.

‘அரசியலமைப்பைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும், சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், பிரேஸில் மக்களின் பொது நலனை மேம்படுத்தவும், பிரேஸிலின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும் நான் உறுதியளிக்கிறேன்’ என்று லூலா கூறினார்.

கடந்த 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாட்டை வழிநடத்தினார். ஒக்டோபர் வாக்கெடுப்பில் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்தார்.

76 வயதான அரசியல்வாதி, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு, தனது மனைவி ரோசங்கலா டா சில்வாவுடன் பிரேசிலியாவில் உள்ள மெட்ரோபொலிட்டன் கதீட்ரலுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:20 மணிக்கு வந்தார்.

லூலா ஆதரவாளர்கள் காலை முதலே காங்கிரஸின் முன் திரண்டனர். அவரது தொழிலாளர் கட்சி சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தலைவர் பதவியேற்றதைக் காண ஆவலாக காத்திருந்தனர்.

சம்பா ஜாம்பவான் மார்டின்ஹோ டா விலா உட்பட 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ‘லுலாபலூசா’ என்று அழைக்கப்படும் இசை விழாவின் ஒரு பகுதியாக தேசியக் கொடியில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு மாபெரும் மேடைகளில் நிகழ்ச்சி நடத்தினர்.

புதிதாக பதவியேற்ற ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இராணுவ மரியாதை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திறந்த கார் அணிவகுப்பில் பயணித்தனர்.


12வருட இடைவெளிக்குப் பிறகு பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற லூலா பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார்.இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் தலைவரானார்.லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றிய பின்னர் காங்கிரஸுக்கு ஆற்றிய உரையில், லூலா ஒக்டோபர் ஜனாதிபதி வாக்கெடுப்பின் உண்மையான வெற்றியாளர் என்று கூறினார்.பழமைவாத முன்னாள் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மற்றும் பசி, வறுமை மற்றும் இனவெறி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தை மீட்பதற்கான போக்கில் கடுமையான மாற்றத்தை உறுதியளித்தார்.‘அரசியலமைப்பைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும், சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், பிரேஸில் மக்களின் பொது நலனை மேம்படுத்தவும், பிரேஸிலின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும் நான் உறுதியளிக்கிறேன்’ என்று லூலா கூறினார்.கடந்த 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாட்டை வழிநடத்தினார். ஒக்டோபர் வாக்கெடுப்பில் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்தார்.76 வயதான அரசியல்வாதி, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு, தனது மனைவி ரோசங்கலா டா சில்வாவுடன் பிரேசிலியாவில் உள்ள மெட்ரோபொலிட்டன் கதீட்ரலுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12:20 மணிக்கு வந்தார்.லூலா ஆதரவாளர்கள் காலை முதலே காங்கிரஸின் முன் திரண்டனர். அவரது தொழிலாளர் கட்சி சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தலைவர் பதவியேற்றதைக் காண ஆவலாக காத்திருந்தனர்.சம்பா ஜாம்பவான் மார்டின்ஹோ டா விலா உட்பட 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ‘லுலாபலூசா’ என்று அழைக்கப்படும் இசை விழாவின் ஒரு பகுதியாக தேசியக் கொடியில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு மாபெரும் மேடைகளில் நிகழ்ச்சி நடத்தினர்.புதிதாக பதவியேற்ற ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இராணுவ மரியாதை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திறந்த கார் அணிவகுப்பில் பயணித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement