மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புத் தொகுதியின் வீடொன்றுக்கு மாதாந்தம் வெறுமனே இரண்டாயிரம் ரூபா மட்டுமே அறவிடயப்படுவதாக தெரிய வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி முன்வைத்த கேள்வியொன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கிய பதில் மூலம் இந்தவிடயம் தெரிய வந்துள்ளது.
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்தொகுதியில் தற்போதைக்கு நூற்றிப் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். அங்குள்ள ஆடம்பர வீடொன்றுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா மட்டுமே வாடகையாக அறவிடப்படுகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முன்னதாக மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்தொகுதியின் வாடகைத் தொகையை அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பில் குறைந்த வாடகையில் ஆடம்பர வீடுகள் மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புத் தொகுதியின் வீடொன்றுக்கு மாதாந்தம் வெறுமனே இரண்டாயிரம் ரூபா மட்டுமே அறவிடயப்படுவதாக தெரிய வந்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி முன்வைத்த கேள்வியொன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கிய பதில் மூலம் இந்தவிடயம் தெரிய வந்துள்ளது.மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்தொகுதியில் தற்போதைக்கு நூற்றிப் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். அங்குள்ள ஆடம்பர வீடொன்றுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா மட்டுமே வாடகையாக அறவிடப்படுகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முன்னதாக மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்தொகுதியின் வாடகைத் தொகையை அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.