• May 02 2024

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் - மகிந்த நம்பிக்கை..!

Chithra / Apr 10th 2024, 8:38 am
image

Advertisement



இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி; தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் என அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

எனினும், குறித்த வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது மகனும் கட்சியின் தேசிய அமைப்பாளரருமான நாமல் ராஜபக்ச களமிறங்க மாட்டார் என நான் நம்புகிறேன்.

அத்துடன், கட்சி சார்பான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டாமென இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை. 

மேலும், கட்சியிலிருந்து விலகுவது மற்றும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பான 

தீர்மானங்களை மேற்கொள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உண்டு.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிளவு தொடர்பில் நான் கருத்து வெளியிட விரும்பில்லை என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் - மகிந்த நம்பிக்கை. இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி; தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் நிச்சயம் களமிறங்குவார் என அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், குறித்த வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது மகனும் கட்சியின் தேசிய அமைப்பாளரருமான நாமல் ராஜபக்ச களமிறங்க மாட்டார் என நான் நம்புகிறேன்.அத்துடன், கட்சி சார்பான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டாமென இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை. மேலும், கட்சியிலிருந்து விலகுவது மற்றும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உண்டு.இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது.இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிளவு தொடர்பில் நான் கருத்து வெளியிட விரும்பில்லை என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement