• May 07 2024

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த..! மொட்டு கட்சி அதிரடி..!samugammedia

Sharmi / Aug 1st 2023, 9:36 am
image

Advertisement

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம்  என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்கவை 2029ஆம் ஆண்டுவரை பதவிக்கு நியமிக்கவில்லை. அடுத்த வருடத்துடன் அவரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

ரணிலுக்கு தொடர்ந்து பதவியிலிருக்கும் விருப்பம் இருந்தால் பொதுஜன பெரமுனவுடனேயே அவர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவ்வாறு இல்லாமல், அவர் ஒவ்வொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி நோக்கத்தை இழந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் மேடைக்கு அழைத்து வருவோம். மக்களை போன்று நாங்களும் தற்போது வரையில் மஹிந்தவை நேசிக்கிறோம். 2015 ஆம் ஆண்டுடன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. மைத்ரிபால சிறிசேன வெற்றியடைந்தார். ஒரு அமைச்சுக்கு பதிலாக இரு அமைச்சுக்கள் தருவதாகவும். தன்னுடன் இணையுமாறும் மைத்ரிபால சிறிசேன எங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், அதற்குஅஞ்சவில்லை. யுத்தத்தை வென்று எமது உரிமைகளை மீண்டும் வென்றெடுத்து கொடுத்ததை மஹிந்த ராஜபக்சவின் தோல்வியிலும் அவருடனேயே நாங்கள் பயணித்தோம் எனவும் தெரிவித்தார்.



ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்த. மொட்டு கட்சி அதிரடி.samugammedia முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம்  என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.களுத்துறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,ரணில் விக்கிரமசிங்கவை 2029ஆம் ஆண்டுவரை பதவிக்கு நியமிக்கவில்லை. அடுத்த வருடத்துடன் அவரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.ரணிலுக்கு தொடர்ந்து பதவியிலிருக்கும் விருப்பம் இருந்தால் பொதுஜன பெரமுனவுடனேயே அவர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவ்வாறு இல்லாமல், அவர் ஒவ்வொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி நோக்கத்தை இழந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் மேடைக்கு அழைத்து வருவோம். மக்களை போன்று நாங்களும் தற்போது வரையில் மஹிந்தவை நேசிக்கிறோம். 2015 ஆம் ஆண்டுடன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. மைத்ரிபால சிறிசேன வெற்றியடைந்தார். ஒரு அமைச்சுக்கு பதிலாக இரு அமைச்சுக்கள் தருவதாகவும். தன்னுடன் இணையுமாறும் மைத்ரிபால சிறிசேன எங்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதற்குஅஞ்சவில்லை. யுத்தத்தை வென்று எமது உரிமைகளை மீண்டும் வென்றெடுத்து கொடுத்ததை மஹிந்த ராஜபக்சவின் தோல்வியிலும் அவருடனேயே நாங்கள் பயணித்தோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement