• May 19 2024

13க்கு தலைசாய்த்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு புத்தி சுயாதீனம் இல்லை! – திட்டித்தீர்த்த எம்.பி.

Chithra / Jan 30th 2023, 10:19 am
image

Advertisement

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு, புத்தி சுயாதீனத்துடன் இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார் என சன்ன ஜயசுமண குறிப்பிட்டார்.

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதிக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ஐ முழுமையாக நடைமுறைப் படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர, தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல என்றும் குறிப்பிட்டார்.


உண்பதற்கு உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கூறும் அனைத்திற்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்றார் என சன்ன ஜயசுமண சாடினார்.

13க்கு தலைசாய்த்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு புத்தி சுயாதீனம் இல்லை – திட்டித்தீர்த்த எம்.பி. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு, புத்தி சுயாதீனத்துடன் இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார் என சன்ன ஜயசுமண குறிப்பிட்டார்.மக்கள் ஆணையற்ற ஜனாதிபதிக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ஐ முழுமையாக நடைமுறைப் படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர, தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல என்றும் குறிப்பிட்டார்.உண்பதற்கு உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கூறும் அனைத்திற்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்றார் என சன்ன ஜயசுமண சாடினார்.

Advertisement

Advertisement

Advertisement