• Mar 14 2025

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் - மக்கள் ஒன்றுகூடி ஆதரவு போராட்டம்

Chithra / Mar 14th 2025, 3:54 pm
image

 


நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயர் மஹிந்த தொடக்க கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநகர சபைக்கு போட்டியிட வேண்டும் எனக் கோரி இன்று ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் வாக்காளர்களாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்த தொடம்ப கமகேவுக்கு உரிய நுவரெலியா பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்னாள் திரண்ட சர்வமத தலைவர்கள், ஆதரவாளர்கள், அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என கோரினார்கள்.

மஹிந்த தொடம்ப கமகே நுவரெலியா மேயராக செயல்பட்டபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் வந்த முன்னாள் மேயர் தொடக்க கமகே, தனக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், எனினும், வாக்காளர்களின் கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் - மக்கள் ஒன்றுகூடி ஆதரவு போராட்டம்  நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயர் மஹிந்த தொடக்க கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநகர சபைக்கு போட்டியிட வேண்டும் எனக் கோரி இன்று ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.நுவரெலியா மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் வாக்காளர்களாலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹிந்த தொடம்ப கமகேவுக்கு உரிய நுவரெலியா பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்னாள் திரண்ட சர்வமத தலைவர்கள், ஆதரவாளர்கள், அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என கோரினார்கள்.மஹிந்த தொடம்ப கமகே நுவரெலியா மேயராக செயல்பட்டபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் வந்த முன்னாள் மேயர் தொடக்க கமகே, தனக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், எனினும், வாக்காளர்களின் கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement