• Sep 11 2025

மூட்டை முடிச்சுகளுடன் விஜேராம இல்லத்துக்கு விடைகொடுக்கும் மஹிந்த!

Chithra / Sep 11th 2025, 7:59 am
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து தொடர்பான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் 151 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சட்டமூலத்திற்கு ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கு மட்டுமே பதிவானது. சபாநாயகர் கையொப்பமிடும் போது,  புதிய சட்டத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வீடுகள் மற்றும் நலன்கள் இரத்து செய்யப்படுகின்றன.

இந்த சட்டத்தின் மூலம், அரச சொத்துகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக மீண்டும் ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் விஜேராம வீடு பெரிய பொது செலவுக்குரியதாக விவாதிக்கப்பட்டது.

இந்த வீடு மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாவுக்கும் மேல் வாடகைக்கு விடக்கூடியதென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை  மஹிந்த ராஜபக்‌ஷ செல்லவுள்ளதாகவும் அறியமுடிகிறது. 

தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ச தரப்பினர் முறையான கோரிக்கையுடன் கேட்டால் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும், இந்த சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே தனியார் இல்லங்களை மீள ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூட்டை முடிச்சுகளுடன் விஜேராம இல்லத்துக்கு விடைகொடுக்கும் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து தொடர்பான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் 151 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமூலத்திற்கு ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கு மட்டுமே பதிவானது. சபாநாயகர் கையொப்பமிடும் போது,  புதிய சட்டத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வீடுகள் மற்றும் நலன்கள் இரத்து செய்யப்படுகின்றன.இந்த சட்டத்தின் மூலம், அரச சொத்துகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக மீண்டும் ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் விஜேராம வீடு பெரிய பொது செலவுக்குரியதாக விவாதிக்கப்பட்டது.இந்த வீடு மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாவுக்கும் மேல் வாடகைக்கு விடக்கூடியதென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில் தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை  மஹிந்த ராஜபக்‌ஷ செல்லவுள்ளதாகவும் அறியமுடிகிறது. தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ராஜபக்ச தரப்பினர் முறையான கோரிக்கையுடன் கேட்டால் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என விமர்சித்துள்ளனர்.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும், இந்த சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே தனியார் இல்லங்களை மீள ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement