முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தையும், இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மூலத் திரைக்கதை பிரதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த திரைப்படம் தொடர்பில் மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
திரைப்படமாகும் மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த திரைப்படம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தையும், இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.குறித்த மூலத் திரைக்கதை பிரதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த திரைப்படம் தொடர்பில் மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.