• May 17 2024

களைகட்டவுள்ள மகிந்தவின் பிறந்தநாள்..! முண்டியடிக்கும் அரசியல்வாதிகள்..! வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 22nd 2023, 9:18 am
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தொடர் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நெலும் மாவத்தையில் பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்றது.

குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையில் மிகப்பெரிய அளவிலான கொண்டாட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பிறந்த நாளை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திற்காக தனியான நாளொன்றை மகிந்த வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சமய நிகழ்ச்சிகளை செய்வதற்கு மகிந்த கம்பஹாவில் இருக்க வேண்டும் என பிரசன்ன கூறினார். மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் தமக்கு தனியான நாட்களை வழங்குமாறு நாமலிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஜோன்ஸ்டன், ரோஹித, சீ.பி மற்றும் அனைவரும் இந்த மத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முன் வந்தனர்.

களைகட்டவுள்ள மகிந்தவின் பிறந்தநாள். முண்டியடிக்கும் அரசியல்வாதிகள். வெளியான தகவல் samugammedia  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றார்.அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் தொடர் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நெலும் மாவத்தையில் பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்றது.குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையில் மிகப்பெரிய அளவிலான கொண்டாட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிறந்த நாளை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்திற்காக தனியான நாளொன்றை மகிந்த வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த சமய நிகழ்ச்சிகளை செய்வதற்கு மகிந்த கம்பஹாவில் இருக்க வேண்டும் என பிரசன்ன கூறினார். மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் தமக்கு தனியான நாட்களை வழங்குமாறு நாமலிடம் கோரிக்கை விடுத்தனர்.ஜோன்ஸ்டன், ரோஹித, சீ.பி மற்றும் அனைவரும் இந்த மத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முன் வந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement