• Nov 22 2024

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு..! வெளியான சுற்றறிக்கை

Chithra / Nov 1st 2024, 1:09 pm
image

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், 

வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு. வெளியான சுற்றறிக்கை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement