முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 10 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை (14) வரை தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக அமைதி மாநாடு 2025 இல் கலந்துகொண்டார்.
உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி மாநாட்டு கவுன்சிலின் ஆசிய பசுபிக் பிராந்தியத் தலைவராக பதவி வகிக்கும் மைத்திரிபால சிறிசேன இம் மாநாட்டின் ஆரம்ப அமர்வில் சிறப்பு சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
இதன்போது உலகளாவிய அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, காலநிலை மாற்றம், மதம் மற்றும் அரசியல் துறைகளை இணைக்கும் உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அரச தலைவர்கள், பேச்சாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
தென்கொரியாவில் இடம்பெற்ற உலக அமைதி மாநாட்டில் மைத்திரி பங்கேற்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 10 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை (14) வரை தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற உலக அமைதி மாநாடு 2025 இல் கலந்துகொண்டார்.உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி மாநாட்டு கவுன்சிலின் ஆசிய பசுபிக் பிராந்தியத் தலைவராக பதவி வகிக்கும் மைத்திரிபால சிறிசேன இம் மாநாட்டின் ஆரம்ப அமர்வில் சிறப்பு சொற்பொழிவொன்றை ஆற்றினார்.இதன்போது உலகளாவிய அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, காலநிலை மாற்றம், மதம் மற்றும் அரசியல் துறைகளை இணைக்கும் உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.அரச தலைவர்கள், பேச்சாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.