• Dec 12 2024

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தீர்வை கொண்டுவர வேண்டும் - மலிங்க வேண்டுகோள்!

Tamil nila / Aug 1st 2024, 10:23 pm
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க (Lasith Malinga),  இலங்கையின் ஆடவர் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து அவர்களுக்கு பலமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முகப்புத்தகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மலிங்க, குறிப்பிட்டுள்ளதாவது 


அணியை விமர்சிப்பது மாத்திரம் அதனை மேம்படுத்த உதவாது என்று கூறியுள்ளார்.

இலங்கை அணி சிறப்பாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் பொதுமக்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவில் இருந்து விலகிச்செல்ல வேண்டாம் என இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோரியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளை பார்ப்பதற்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என்றும், போட்டிகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

"இலங்கையர்களே இலங்கையர்களை விமர்சித்தால் கிரிக்கெட் விளையாட்டு ஒரு போதும் மேம்படாது” என மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியாளர் யாராக இருந்தாலும், இறுதியில், போட்டியின் வெற்றியை பொறுத்த வரையில், அது களத்தில் இருக்கும் வீரர்களை சார்ந்தது. 

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தீர்வை பார்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்றும் மலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.  

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தீர்வை கொண்டுவர வேண்டும் - மலிங்க வேண்டுகோள் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க (Lasith Malinga),  இலங்கையின் ஆடவர் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து அவர்களுக்கு பலமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.முகப்புத்தகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மலிங்க, குறிப்பிட்டுள்ளதாவது அணியை விமர்சிப்பது மாத்திரம் அதனை மேம்படுத்த உதவாது என்று கூறியுள்ளார்.இலங்கை அணி சிறப்பாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் பொதுமக்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவில் இருந்து விலகிச்செல்ல வேண்டாம் என இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோரியுள்ளார்.இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளை பார்ப்பதற்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என்றும், போட்டிகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்."இலங்கையர்களே இலங்கையர்களை விமர்சித்தால் கிரிக்கெட் விளையாட்டு ஒரு போதும் மேம்படாது” என மலிங்க குறிப்பிட்டுள்ளார்.பயிற்சியாளர் யாராக இருந்தாலும், இறுதியில், போட்டியின் வெற்றியை பொறுத்த வரையில், அது களத்தில் இருக்கும் வீரர்களை சார்ந்தது. கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தீர்வை பார்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்றும் மலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement