• May 18 2024

மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அதிகாரம் இல்லை-அபராதம் செலுத்துவேன் - மைத்திரி! samugammedia

Sharmi / Apr 19th 2023, 2:37 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடம் மேதினக் கூட்டத்தினை கண்டியில் ஏற்பாடு செய்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொது ரணில் மற்றும் மைத்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அதிகாரம் இல்லை-அபராதம் செலுத்துவேன் - மைத்திரி samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வருடம் மேதினக் கூட்டத்தினை கண்டியில் ஏற்பாடு செய்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொது ரணில் மற்றும் மைத்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement