• Apr 02 2025

கேகாலை வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய நபர் கைது!

Chithra / Mar 30th 2025, 1:08 pm
image

 

கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் வைத்தியசாலைக்கு முன்னால் சந்தேக நபர் வைத்தியரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த விசேட வைத்தியர் தற்போது  கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேகாலை வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய நபர் கைது  கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் வைத்தியசாலைக்கு முன்னால் சந்தேக நபர் வைத்தியரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் ஆவார்.தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த விசேட வைத்தியர் தற்போது  கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now