• Jun 13 2024

மனைவியை தாக்கி காலை துண்டித்த கணவன்..! கொடூரச் சம்பவம் samugammedia

Chithra / Jun 20th 2023, 1:57 pm
image

Advertisement

கணவனால் தாக்கப்பட்ட  மனைவி கால் துண்டிக்கப்பட்டு கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்டு கால் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் நிலை தொடர்பில் கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இலேபெரும, நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், துண்டிக்கப்பட்ட கால் மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


மனைவியை தாக்கி காலை துண்டித்த கணவன். கொடூரச் சம்பவம் samugammedia கணவனால் தாக்கப்பட்ட  மனைவி கால் துண்டிக்கப்பட்டு கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்டு கால் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.குறித்த பெண்ணின் நிலை தொடர்பில் கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இலேபெரும, நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், துண்டிக்கப்பட்ட கால் மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement