அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்த நபரொருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அநுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
இவர் நேற்று வியாழக்கிழமை மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றின் பின்பகுதியில் நின்றுகொண்டு, புத்த கயா மாவத்தையில் இருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாநகர சபைக்குச் சொந்தமான கழிவுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குப்பையேற்றிச் செல்லும் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்த நபரொருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் அநுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.இவர் நேற்று வியாழக்கிழமை மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றின் பின்பகுதியில் நின்றுகொண்டு, புத்த கயா மாவத்தையில் இருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே தவறி விழுந்துள்ளார்.இதனையடுத்து, காயமடைந்தவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மாநகர சபைக்குச் சொந்தமான கழிவுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.