• Feb 07 2025

நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவருக்கு ஏற்பட்ட துயரம் - பரிதாபமாக உயிரிழப்பு

Chithra / Feb 7th 2025, 12:25 pm
image

 

மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவின் நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. 

உயிரிழந்தவர் நெலும்வெவ சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

சம்பவத்தன்று, உயிரிழந்தவர் தனது தாயாருக்கு மதிய உணவு கொடுப்பதற்கு வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது வீதியிலிருந்த நாய்கள் சில இவரை துரத்தியுள்ளன. 

இதன்போது, இவர் நாய்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக தனது வீட்டிற்குள் நுழைந்த போது, அங்கு பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் , மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவருக்கு ஏற்பட்ட துயரம் - பரிதாபமாக உயிரிழப்பு  மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவின் நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம்  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவர் நெலும்வெவ சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.  இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  சம்பவத்தன்று, உயிரிழந்தவர் தனது தாயாருக்கு மதிய உணவு கொடுப்பதற்கு வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது வீதியிலிருந்த நாய்கள் சில இவரை துரத்தியுள்ளன. இதன்போது, இவர் நாய்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக தனது வீட்டிற்குள் நுழைந்த போது, அங்கு பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் , மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement