• Jan 22 2025

உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்! கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Jan 20th 2025, 3:33 pm
image

 

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 05 ஆம் திகதி, வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 12 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, கடந்த 12 ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து வெறுமனே 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

திருடப்பட்ட மிகுதி நகைகளை மீட்க பொலிசார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


அத்துடன் சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள், கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் தடுப்புகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸாசார் மேற்கொண்டு வருகின்றனர் 

உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் கிளிநொச்சியில் சம்பவம்  கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கடந்த 05 ஆம் திகதி, வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது 12 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, கடந்த 12 ஆம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிருந்து வெறுமனே 8 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மிகுதி நகைகளை மீட்க பொலிசார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள், கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் தடுப்புகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸாசார் மேற்கொண்டு வருகின்றனர் 

Advertisement

Advertisement

Advertisement