• Oct 31 2024

மனைவியை கொன்ற கணவனுக்கு 28 வருடங்களின் பின் மரண தண்டனை!

Chithra / Oct 31st 2024, 2:35 pm
image

Advertisement

 

அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கிரல தெனியகே தர்மதாஸ என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 39 வயதுடைய மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக சுமார் 28 வருட காலமாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனைவியை கொன்ற கணவனுக்கு 28 வருடங்களின் பின் மரண தண்டனை  அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.இந்த கொலை சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.கிரல தெனியகே தர்மதாஸ என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 39 வயதுடைய மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இதனையடுத்து, சந்தேக நபருக்கு எதிராக சுமார் 28 வருட காலமாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வந்துள்ளது.சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement