• Feb 11 2025

கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை - 04 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை

Chithra / Feb 11th 2025, 7:28 am
image

கொழும்பு - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 43 வயதுடைய நபரே நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவினரைக் கண்டுபிடிப்பதற்காக 04 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை - 04 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை கொழும்பு - கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 43 வயதுடைய நபரே நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவினரைக் கண்டுபிடிப்பதற்காக 04 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement