• May 19 2024

கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு! தென்னிலங்கையில் பரபரப்பு

Chithra / Dec 21st 2022, 7:34 am
image

Advertisement

இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அடையாளந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் ஒருவர் இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இங்கிரிய பொலிஸாரால் அடையாளந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக முறைப்பாட்டாளருக்கு அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்குச் சென்ற அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு தென்னிலங்கையில் பரபரப்பு இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அடையாளந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் ஒருவர் இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து இங்கிரிய பொலிஸாரால் அடையாளந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக முறைப்பாட்டாளருக்கு அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்குச் சென்ற அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement