• May 19 2024

முல்லைத்தீவில் பல ஏக்கர் மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்! samugammedia

Tamil nila / Aug 4th 2023, 7:11 am
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 சதவீதமான காடுகளிற்கு மேலதிகமாக 5 சதவீதமாக புதிய காடுகளை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

11798 ஹெக்டெயர் பரப்பில் காடுகளை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையினால் இது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாகவும் விசனம் எழுந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களின் நிலங்கள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.

குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் கீழுள்ள நிலங்கள் விடுவிப்பதாக அரசாங்கம் சொல்லப்பட்ட போதும் இதுவரை விடுவிக்கப்படவில்லையெனவும்,மாவட்டத்தில் 20543 ஹெக்டெயர் அளவு காணிகளை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 11798 ஹெட்ரயர் நிலங்களில் புதிதாக காடுகள் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இது தடையாக உள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பல ஏக்கர் மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம் samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 சதவீதமான காடுகளிற்கு மேலதிகமாக 5 சதவீதமாக புதிய காடுகளை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.11798 ஹெக்டெயர் பரப்பில் காடுகளை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையினால் இது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாகவும் விசனம் எழுந்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களின் நிலங்கள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் கீழுள்ள நிலங்கள் விடுவிப்பதாக அரசாங்கம் சொல்லப்பட்ட போதும் இதுவரை விடுவிக்கப்படவில்லையெனவும்,மாவட்டத்தில் 20543 ஹெக்டெயர் அளவு காணிகளை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 11798 ஹெட்ரயர் நிலங்களில் புதிதாக காடுகள் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இது தடையாக உள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement