• May 19 2024

யாழ்.தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது..! பொதுமக்களை அணிதிரண்டு வருமாறு அழைப்பு samugammedia

Chithra / May 4th 2023, 6:58 am
image

Advertisement

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

யாழ். தையிலிட்டி விகாரைக்கு அண்மையில் இன்று காலை எங்களுடைய ஆதரவாளர்கள் ஒன்றுகூடிய போது ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பொன் மாஸ்டர் கைது செயப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.


மேலும்,  இன்னும் நாங்கள் இங்கேயே இருந்து கொண்டிருக்கின்றோம். விகாரைக்குள் எவரும் நுழைய முடியாதளவிற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.

குறித்த வீதியிலேயே ஒன்றுகூடுபவர்களை கூட கடுமையாக அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கும் நிலையே காணப்படுகின்றது.

இந்த பொலிஸாரின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதுடன், இந்தப் போரட்டம் தொடர்ந்தும் நடைபெறும்.

போராட்டத்திற்கு வலுச்சேர்க்க பொதுமக்களை அணிதிரண்டு வருமாறும் கஜேந்திரன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது. பொதுமக்களை அணிதிரண்டு வருமாறு அழைப்பு samugammedia தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.இதுதொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,யாழ். தையிலிட்டி விகாரைக்கு அண்மையில் இன்று காலை எங்களுடைய ஆதரவாளர்கள் ஒன்றுகூடிய போது ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பொன் மாஸ்டர் கைது செயப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.மேலும்,  இன்னும் நாங்கள் இங்கேயே இருந்து கொண்டிருக்கின்றோம். விகாரைக்குள் எவரும் நுழைய முடியாதளவிற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.குறித்த வீதியிலேயே ஒன்றுகூடுபவர்களை கூட கடுமையாக அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கும் நிலையே காணப்படுகின்றது.இந்த பொலிஸாரின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதுடன், இந்தப் போரட்டம் தொடர்ந்தும் நடைபெறும்.போராட்டத்திற்கு வலுச்சேர்க்க பொதுமக்களை அணிதிரண்டு வருமாறும் கஜேந்திரன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement