• Jul 27 2024

பூமியைப் போன்ற பருவநிலை கொண்டிருந்த செவ்வாய் கிரகம் – ஆய்வில் வெளியான தகவல்! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 10:35 am
image

Advertisement

ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற பருவநிலை இருந்ததாக தெரியவந்துள்ளது.

தற்போது அதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குளிர்ச்சியான, வறண்ட பருவங்கள், இரண்டும் மாறி மாறி அங்கு வந்திருக்கின்றன.

செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருந்திருக்கலாம் என்று Nature சஞ்சிகை வெளியிட்ட கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

குறிப்பாக நாசாவால் வெளியிடப்பட்ட அந்தப் படம், வண்டல் பாறைகளில் அறுகோணப் படிம வடிவங்களைக் காட்டுகிறது. இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஒரு வறண்ட பாலைவனமாக இருக்கிறது.

ஆனால் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பரந்த ஏரிகளும் ஆறுகளும் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் பாய்ச்சப்பட்ட நாசாவின் Curiosity விண்கலம் கடந்த பத்தாண்டுகளாக ‘Gale Crater’ பகுதியின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறது.

மேலும் அங்கு உயிரினங்கள் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. தொடர் ஆய்வுகளின் மூலம் அதற்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.


பூமியைப் போன்ற பருவநிலை கொண்டிருந்த செவ்வாய் கிரகம் – ஆய்வில் வெளியான தகவல் samugammedia ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற பருவநிலை இருந்ததாக தெரியவந்துள்ளது.தற்போது அதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குளிர்ச்சியான, வறண்ட பருவங்கள், இரண்டும் மாறி மாறி அங்கு வந்திருக்கின்றன.செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருந்திருக்கலாம் என்று Nature சஞ்சிகை வெளியிட்ட கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.குறிப்பாக நாசாவால் வெளியிடப்பட்ட அந்தப் படம், வண்டல் பாறைகளில் அறுகோணப் படிம வடிவங்களைக் காட்டுகிறது. இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஒரு வறண்ட பாலைவனமாக இருக்கிறது.ஆனால் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பரந்த ஏரிகளும் ஆறுகளும் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.செவ்வாய் கிரகத்தில் பாய்ச்சப்பட்ட நாசாவின் Curiosity விண்கலம் கடந்த பத்தாண்டுகளாக ‘Gale Crater’ பகுதியின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறது.மேலும் அங்கு உயிரினங்கள் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. தொடர் ஆய்வுகளின் மூலம் அதற்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.

Advertisement

Advertisement

Advertisement