• Nov 22 2024

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்..!

Sharmi / Aug 1st 2024, 11:47 am
image

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் 58 வேலைத்திட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 02 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 03 வெளிநாட்டு கடன் திட்டங்கள் மற்றும் 08 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின்படி அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

கொவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. அவற்றுள் வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும் என்று அமைச்சர் கருதுகிறார்.

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு பாதியில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை நல்ல சான்றாகும்.

நாடு மறுவளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகள் என்ன அவதூறுகளை கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நாடு மீண்டு வருகிறது" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பம். கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 171 பாரிய திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இவற்றில் 58 வேலைத்திட்டங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி, வீதிகள் போன்ற துறைகள் தொடர்பான 58 திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது நடைமுறையில் உள்ள 171 திட்டங்களில் 02 வெளிநாட்டு மானிய திட்டங்கள், 03 வெளிநாட்டு கடன் திட்டங்கள் மற்றும் 08 திட்டங்கள் உள்ளூர் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த 08 திட்டங்களும் உள்ளடங்கலாக நிதியமைச்சின் அறிக்கைகளின்படி அடுத்த வருடத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை 113 ஆகும்.கொவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பல பெரிய அளவிலான திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. அவற்றுள் வெளிநாட்டு உதவி மற்றும் கடனில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அவர் தலையிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட புதிய திட்டங்களை ஆரம்பிக்க அனுமதிக்கும் என்று அமைச்சர் கருதுகிறார்.“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு பாதியில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை நல்ல சான்றாகும். நாடு மறுவளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகள் என்ன அவதூறுகளை கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நாடு மீண்டு வருகிறது" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement