• Nov 26 2024

சீனாவில் பாரிய நிலநடுக்கம்...!samugammedia

Anaath / Dec 19th 2023, 11:58 am
image

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால்  சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

மேலும் இந்த நில நடுக்கத்தில்  220 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன அரசு உறுதி செய்துள்ளது.

மேலும், கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ​நேற்றிரவு  நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாகவும், இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதங்கள் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பாரிய நிலநடுக்கம்.samugammedia சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால்  சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த நில நடுக்கத்தில்  220 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன அரசு உறுதி செய்துள்ளது.மேலும், கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது.குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ​நேற்றிரவு  நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாகவும், இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதங்கள் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement