• May 19 2024

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; 4400க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு – 7 நாட்கள் துக்கம் அனுஸ்டிக்க அறிவிப்பு

Chithra / Feb 7th 2023, 9:12 am
image

Advertisement

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 ஆயிரத்து 834க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (பெப்.07) காலை நிலவரப்படி துருக்கியில் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கியின் இடர் முகாமைத்துவ் சேவைகளின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தால் இதுவரை 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.


சிரியாவில், 1,451 உயிரிழப்புகளும் 3,531 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலையில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்(Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களில் துருக்கி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; 4400க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு – 7 நாட்கள் துக்கம் அனுஸ்டிக்க அறிவிப்பு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார்.துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்து 372 பேர் உயிரிழந்துள்ளதுடன்,15 ஆயிரத்து 834க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று (பெப்.07) காலை நிலவரப்படி துருக்கியில் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கியின் இடர் முகாமைத்துவ் சேவைகளின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தால் இதுவரை 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.சிரியாவில், 1,451 உயிரிழப்புகளும் 3,531 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.7.8 ரிக்டர் அளவில் அதிகாலையில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்(Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களில் துருக்கி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement