• Nov 28 2024

மஹாவெ பகுதியில் பாரிய தீ விபத்து; பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!

Tamil nila / Oct 24th 2024, 7:38 pm
image

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ நகரில் நேற்று (23) இரவு ஜவுளிக் கடையில் தீ பரவியதாகவும், அதே கடை வளாகத்தில் இருந்த மேலும் பல கடைகள் தீயில் எரிந்து நாசமாகி பல கோடி ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தொடுவாய் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்து ஏற்பட்டு அதே கட்டிடத்தில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற கடைகளுக்கும் பரவி கடை வளாகம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை 5 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அவற்றின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க சிலாபம் நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய கடைகளில் மற்றும் தொடுவாய், மாதம்பை மற்றும் மாரவில் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஹாவெவ நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர் சிலாபம் - கொழும்பு வீதியின் போக்குவரத்தை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தங்கொடுவ ஹொர வளைவு ஊடாக வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்திருந்தனர்.

தீ விபத்தின் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதிலும், மழையின் நடுவே தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைளை தொடுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மஹாவெ பகுதியில் பாரிய தீ விபத்து; பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம் சிலாபம்-கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ நகரில் நேற்று (23) இரவு ஜவுளிக் கடையில் தீ பரவியதாகவும், அதே கடை வளாகத்தில் இருந்த மேலும் பல கடைகள் தீயில் எரிந்து நாசமாகி பல கோடி ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தொடுவாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தீ விபத்து ஏற்பட்டு அதே கட்டிடத்தில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற கடைகளுக்கும் பரவி கடை வளாகம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதுவரை 5 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அவற்றின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க சிலாபம் நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய கடைகளில் மற்றும் தொடுவாய், மாதம்பை மற்றும் மாரவில் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மஹாவெவ நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர் சிலாபம் - கொழும்பு வீதியின் போக்குவரத்தை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தங்கொடுவ ஹொர வளைவு ஊடாக வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்திருந்தனர்.தீ விபத்தின் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதிலும், மழையின் நடுவே தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இத் தீவிபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைளை தொடுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement