• Feb 25 2025

சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக பாரிய தீ

Tharmini / Feb 25th 2025, 12:02 pm
image

சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் நேற்று (24) திடீர் என பாரிய தீ பரவியுள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ பரவலின் போது 25 ஹெக்டையர் பெரும் அளவில் வனப் பகுதி நாசம் அடைந்து வருகிறது.

மேலும் தீ பரவிவருகிறது. இத் தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், கடும் வெப்பமான வானிலை காரணமாக அருகில் செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (25) காலை முதல் மவுஸ்சாகலை முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்க சிறம பட்டனர்.

கடுமையான வெப்பம் நிலவுவதன் தொடர்ந்து தீ பரவி வருவதால் தீ கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது.

25 ஹெக்டையர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் அப் பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அத்துடன் நீர் ஊற்றுகள் வற்றி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.





சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக பாரிய தீ சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் நேற்று (24) திடீர் என பாரிய தீ பரவியுள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.இத் தீ பரவலின் போது 25 ஹெக்டையர் பெரும் அளவில் வனப் பகுதி நாசம் அடைந்து வருகிறது.மேலும் தீ பரவிவருகிறது. இத் தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், கடும் வெப்பமான வானிலை காரணமாக அருகில் செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (25) காலை முதல் மவுஸ்சாகலை முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்க சிறம பட்டனர்.கடுமையான வெப்பம் நிலவுவதன் தொடர்ந்து தீ பரவி வருவதால் தீ கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது.25 ஹெக்டையர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனால் அப் பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அத்துடன் நீர் ஊற்றுகள் வற்றி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement