• Jan 13 2025

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Chithra / Jan 9th 2025, 9:06 am
image

 

அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும்  பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது எனவும் முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு மற்றும் பச்சை அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருமளவில் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்தே இந்த மோசடி இடம்பெறுகின்றது என்பது குறித்து சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி இறக்குமதி தொடர்பில் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு  அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும்  பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது எனவும் முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நாடு மற்றும் பச்சை அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருமளவில் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்தே இந்த மோசடி இடம்பெறுகின்றது என்பது குறித்து சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரிசி இறக்குமதி தொடர்பில் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement