மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று காலை நடைபெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு இடம்பெற்றது.
பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீதி அமைச்சினால் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் மாஜிதா ஒருங்கிணைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 3, 5, 6, ஆம் திகதிகள் இப்பயிற்சி செயலமர்வானது 3 நாட்கள் நடைபெற்றிருந்தது.
இதற்கமைய குறத்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இலச்சினையும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா மற்றும் மத்தியத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் .மாஜிதா மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்தியஸ்தம் பயிற்சி செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று காலை நடைபெற்றது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு இடம்பெற்றது. பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீதி அமைச்சினால் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் மாஜிதா ஒருங்கிணைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 3, 5, 6, ஆம் திகதிகள் இப்பயிற்சி செயலமர்வானது 3 நாட்கள் நடைபெற்றிருந்தது.இதற்கமைய குறத்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இலச்சினையும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா மற்றும் மத்தியத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் .மாஜிதா மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.