• Feb 20 2025

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி இளம் உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பு!

Chithra / Feb 16th 2025, 10:22 am
image

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் அவர்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் அரசியல் உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

படவிளக்கம் 

இதன்போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், விசேடமாக தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், 

தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை, எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களால் தமிழ் மக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றார்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன. 

இது தவிர, எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி இளம் உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பு இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் அவர்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் அரசியல் உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.படவிளக்கம் இதன்போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், விசேடமாக தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை, எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களால் தமிழ் மக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றார்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன. இது தவிர, எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement