• May 19 2024

ஜனாதிபதி ரணில் மற்றும் சமந்தா பவர் இடையே சந்திப்பு! samugammedia

Tamil nila / Sep 20th 2023, 7:35 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தலைமை அதிகாரி சமந்தா பவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள The Pierre Taj எனும் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சமந்தா பவர் ஆகியோரிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு USAID வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின் போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுருக்கமான விளக்கமொன்றை முன்வைத்தத்த ஜனாதிபதி அதன் வெற்றிகரமான முடிவுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு USAID தொடர்ந்து ஆதரவளிக்கும் அதேவேளையில் தேவையான நிபுணத்துவத்தையும் வழங்கும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியூயோர்க் சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் (21) அமர்வில் தமது விசேட உரையினை ஆற்றவுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கில் ''இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்'' எனும் தலைப்பில் உயர்மட்ட வர்த்தக வட்ட மேசை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக சபை மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

வணிக வட்டமேசைக் கலந்துரையாடலில் 40 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வணிகர்கள் இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் மற்றும் சமந்தா பவர் இடையே சந்திப்பு samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) தலைமை அதிகாரி சமந்தா பவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள The Pierre Taj எனும் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சமந்தா பவர் ஆகியோரிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு USAID வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின் போது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுருக்கமான விளக்கமொன்றை முன்வைத்தத்த ஜனாதிபதி அதன் வெற்றிகரமான முடிவுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளார்.அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு USAID தொடர்ந்து ஆதரவளிக்கும் அதேவேளையில் தேவையான நிபுணத்துவத்தையும் வழங்கும் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியூயோர்க் சென்றுள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் (21) அமர்வில் தமது விசேட உரையினை ஆற்றவுள்ளார்.இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கில் ''இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்'' எனும் தலைப்பில் உயர்மட்ட வர்த்தக வட்ட மேசை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக சபை மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.வணிக வட்டமேசைக் கலந்துரையாடலில் 40 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வணிகர்கள் இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement