• May 06 2024

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் நினைவேந்தல்...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 1:20 pm
image

Advertisement

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா ஷாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இதேநாளில்  ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும்  நிகழ்வு இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், விமானப்படையினர், பொலிஸார் மற்றும் முப்படையினர் கலந்து கொண்டனர்.

 குறித்த நிகழ்வு 9.19 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக  9.25 மணியிலிருந்து 9.27 மணிவரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா ஷாந்தி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.




சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் நினைவேந்தல்.samugammedia சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா ஷாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.கடந்த 2004 ஆம் ஆண்டு இதேநாளில்  ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும்  நிகழ்வு இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், விமானப்படையினர், பொலிஸார் மற்றும் முப்படையினர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு 9.19 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக  9.25 மணியிலிருந்து 9.27 மணிவரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா ஷாந்தி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement