• May 02 2024

கெத்து காட்டிய மெஸ்ஸி!

crownson / Dec 4th 2022, 8:01 am
image

Advertisement

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

மிகவும் முக்கியமான இப்போட்டியில் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது.

ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடித்து தனது அணிக்கு முதல் பாதியில் முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது பாதியின் 57வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார்.

இதனால் அர்ஜெண்டினாவின் கோல் எண்ணிக்கை இரண்டு ஆனது. பின்னர் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா தரப்பில் என்சோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார்.

அதன் பின்னர் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.போட்டி தொடங்கிய 10 வது நிமிடத்தில் டெப்பே கோல் அடித்து அரங்கத்தை அதிர வைத்தார்.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பிளைண்ட் மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றதுஇரண்டாவது பாதியில் அமெரிக்க வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

76 வது நிமிடத்தில் ஹாஜி கோல் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

தொடர்ந்து 81 வது நிமிடத்தில் முதல் இரண்டு கோலுக்கு உதவிய நெதர்லாந்து வீரர் Dumfries  அசத்தலாக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

கெத்து காட்டிய மெஸ்ஸி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகவும் முக்கியமான இப்போட்டியில் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடித்து தனது அணிக்கு முதல் பாதியில் முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது பாதியின் 57வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் கோல் அடித்தார்.இதனால் அர்ஜெண்டினாவின் கோல் எண்ணிக்கை இரண்டு ஆனது. பின்னர் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா தரப்பில் என்சோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். அதன் பின்னர் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.போட்டி தொடங்கிய 10 வது நிமிடத்தில் டெப்பே கோல் அடித்து அரங்கத்தை அதிர வைத்தார்.முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பிளைண்ட் மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றதுஇரண்டாவது பாதியில் அமெரிக்க வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.76 வது நிமிடத்தில் ஹாஜி கோல் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். தொடர்ந்து 81 வது நிமிடத்தில் முதல் இரண்டு கோலுக்கு உதவிய நெதர்லாந்து வீரர் Dumfries  அசத்தலாக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

Advertisement

Advertisement