• May 17 2024

உலக கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி படைத்த தொடர் சாதனைகள்!

Chithra / Dec 21st 2022, 8:26 am
image

Advertisement

காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மெஸ்ஸியின் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகி ஆர்ஜெண்டினா வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.


உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் படைத்துள்ள சாதனைகள் அளப்பரியது.

நாட்டிற்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்த நிலையில் மெஸ்ஸியின் உலக கோப்பை கனவு நனவாகியிருந்தது.


இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது. 

இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்ஸியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்ததுடன் அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளதுடன்,மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.


மெஸ்ஸி இந்த தொடரில் லீக் சுற்று, 2 ஆவது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்து புதிய சாதனை புரிந்துள்ளார்.

உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி படைத்துள்ளதுடன், மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடியுள்ளார்.


இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் சாதனையை மெஸ்ஸி உடைத்துள்ளார்.

மேலும், மெஸ்சியின் கனவு தற்போது நனவாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.

அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்றிருந்தார். உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். 

உலக கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி படைத்த தொடர் சாதனைகள் காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் ஆர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில், நட்சத்திர வீரரான மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மெஸ்ஸியின் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகி ஆர்ஜெண்டினா வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, கால்பந்து உலகில் படைத்துள்ள சாதனைகள் அளப்பரியது.நாட்டிற்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்த நிலையில் மெஸ்ஸியின் உலக கோப்பை கனவு நனவாகியிருந்தது.இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்ஸியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்ததுடன் அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளதுடன்,மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.மெஸ்ஸி இந்த தொடரில் லீக் சுற்று, 2 ஆவது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்து புதிய சாதனை புரிந்துள்ளார்.உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி படைத்துள்ளதுடன், மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடியுள்ளார்.இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் சாதனையை மெஸ்ஸி உடைத்துள்ளார்.மேலும், மெஸ்சியின் கனவு தற்போது நனவாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்றிருந்தார். உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement