பலத்த காற்று மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
நாட்டின் ஊடாக நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான கனமழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் பலத்த காற்று மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.நாட்டின் ஊடாக நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் நிலைமை தொடர்ந்து அதிகரிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான கனமழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேநேரம், மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.