• Nov 22 2024

சர்க்கரை, உப்பில் ஒளிந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் - எச்சரிக்கும் ஆய்வு!

Tamil nila / Aug 14th 2024, 11:09 pm
image

சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவில் விநியோகிக்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன. இவை 0.1 எம்எம் முதல் 5 எம்எம் அளவில் காணப்படுகின்றன.உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன.

இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும். பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வா இது குறித்து பேசுகையில், “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக் கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

சர்க்கரை, உப்பில் ஒளிந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் - எச்சரிக்கும் ஆய்வு சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவில் விநியோகிக்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன. இவை 0.1 எம்எம் முதல் 5 எம்எம் அளவில் காணப்படுகின்றன.உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன.இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும். பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வா இது குறித்து பேசுகையில், “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக் கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement