• May 19 2024

கொழும்பில் 03 மணி நேரத்தில் ஈட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் வருமானம்!

Chithra / Dec 7th 2022, 11:59 am
image

Advertisement


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

அங்கு கைது செய்யப்பட்ட 78 பேர் இது தொடர்பான அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதத் தொகை இரண்டு லட்சத்து 38,770 ரூபாயாகும்.

ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிக்கட் இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபாயாகும் என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பில் 03 மணி நேரத்தில் ஈட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய் வருமானம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை இடம்பெற்ற விசேட பயணச்சீட்டு பரிசோதனையின் போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில் நிலைய ஊழியர்கள் இணைந்து இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டதாக புகையிரத வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.அங்கு கைது செய்யப்பட்ட 78 பேர் இது தொடர்பான அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதத் தொகை இரண்டு லட்சத்து 38,770 ரூபாயாகும்.ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, டிக்கட் இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபாயாகும் என குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement