புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இசை நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாட்டில் நேற்று இரவு புத்தளம் கொழும்பு முகத்திடலில் இசை நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ கலந்து கொண்டார்.
அத்துடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக்க அமல் மாயாதுன்ன, மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேடையில் ஏறி சிங்கள பாடல்களைப் பாடி இளைஞர்களை மகிழ்வித்துள்ளார்.
அத்துடன் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க அமல் மாயாதுன்னவும் மேடையில் பாடலொன்றை பாடியுள்ளார்.
இதன்போது பாடகர்களான பாதியா சந்தோஷ், வஸ்தி, செண்டிக்ரேட், ரொமேஸ் சுகத்தபால மற்றும் பல கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.
குறித்த இசை நிகழ்ச்சியைக் கண்டுகழிப்பதற்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.
இசை நிகழ்வில் சிங்கள பாடல்களைப் பாடி அசத்திய அமைச்சர் ஹரீன்; காணக்குவிந்த பெருந்திரளான இளைஞர்கள் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இசை நிகழ்வில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாட்டில் நேற்று இரவு புத்தளம் கொழும்பு முகத்திடலில் இசை நிகழ்வு நடைபெற்றது.குறித்த நிகழ்வில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ கலந்து கொண்டார். அத்துடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக்க அமல் மாயாதுன்ன, மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேடையில் ஏறி சிங்கள பாடல்களைப் பாடி இளைஞர்களை மகிழ்வித்துள்ளார்.அத்துடன் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க அமல் மாயாதுன்னவும் மேடையில் பாடலொன்றை பாடியுள்ளார்.இதன்போது பாடகர்களான பாதியா சந்தோஷ், வஸ்தி, செண்டிக்ரேட், ரொமேஸ் சுகத்தபால மற்றும் பல கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.குறித்த இசை நிகழ்ச்சியைக் கண்டுகழிப்பதற்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.