• May 17 2024

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்...! முக்கிய பிரதிநிதிகளுடனும் சந்திப்பு...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 2:59 pm
image

Advertisement

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவாவுக்கு இன்று(11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா செல்கின்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்கவும் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் இவ்விஜயத்தின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. அதேவேளை 'மலையகம் - 200' நிகழ்வு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம். முக்கிய பிரதிநிதிகளுடனும் சந்திப்பு.samugammedia இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவாவுக்கு இன்று(11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா செல்கின்றார். அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்கவும் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர்.சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் இவ்விஜயத்தின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. அதேவேளை 'மலையகம் - 200' நிகழ்வு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement