• Jan 09 2025

புத்தாண்டில் பெண் சிறைக்கைதிகளை பார்வையிட்ட அமைச்சர் சரோஜா!

Chithra / Jan 2nd 2025, 12:34 pm
image

 

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள பெண் கைதிகளை சந்தித்துத்து பேசினார்.

பெண் கைதிகளின் நலன்கள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுகளையும் வழங்கினார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஓல்கா மற்றும் அவரது அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கெடுத்தனர்.


புத்தாண்டில் பெண் சிறைக்கைதிகளை பார்வையிட்ட அமைச்சர் சரோஜா  சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள பெண் கைதிகளை சந்தித்துத்து பேசினார்.பெண் கைதிகளின் நலன்கள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுகளையும் வழங்கினார்.சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஓல்கா மற்றும் அவரது அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கெடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement