• May 09 2024

மின்சார சபையின் மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 7th 2023, 9:07 am
image

Advertisement

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகமை மற்றும் சர்வதேச நாணய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதான பிரதிநிதிகள் மற்றும் மின்துறை நிபுணர்கள் கலந்துகொண்டதாக அவர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக இந்த அபிவிருத்தி முகவர் நிலையங்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மின்துறை மறுசீரமைப்பு அலுவலகம், வளர்ச்சி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியைப் பெற்று, அடுத்த திட்டம் மற்றும் புதிய சட்டத்தின் விதிகளை செயல்படுத்தும்.

புதிய மின்சார சட்டமூலம் சட்ட வரைவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகமை மற்றும் சர்வதேச நாணய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதான பிரதிநிதிகள் மற்றும் மின்துறை நிபுணர்கள் கலந்துகொண்டதாக அவர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாக இந்த அபிவிருத்தி முகவர் நிலையங்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.மின்துறை மறுசீரமைப்பு அலுவலகம், வளர்ச்சி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியைப் பெற்று, அடுத்த திட்டம் மற்றும் புதிய சட்டத்தின் விதிகளை செயல்படுத்தும்.புதிய மின்சார சட்டமூலம் சட்ட வரைவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement