• Oct 10 2024

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Chithra / Oct 9th 2024, 7:18 pm
image

Advertisement

 

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை எந்த வகையிலும் நிறுத்த யாரும் கேட்கவில்லை.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அமைச்சினால் இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது, எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அமைச்சர் அதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

அத்துடன் மேல்மாகாண சபைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதனை பெற்றுக் கொள்வதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

 அதனை நிதி ஆணையாளருடன் பேசி அந்நிதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிதி அமைச்சின் மூலமாக தேவையான 1200 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பெறுவது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றோம் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை எந்த வகையிலும் நிறுத்த யாரும் கேட்கவில்லை.ஒவ்வொரு மாகாணத்திற்கும் அமைச்சினால் இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது, எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அமைச்சர் அதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.அத்துடன் மேல்மாகாண சபைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதனை பெற்றுக் கொள்வதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை நிதி ஆணையாளருடன் பேசி அந்நிதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிதி அமைச்சின் மூலமாக தேவையான 1200 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பெறுவது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றோம் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement