• May 03 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு வௌியிட்ட தகவல் !!

Tamil nila / Apr 19th 2024, 7:20 pm
image

Advertisement

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. .

அதன்படி, 2023 மார்ச் 23ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், நடைபெறவிருந்த போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டது.

இந்த மனுக்கள் தற்போது உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.






அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு வௌியிட்ட தகவல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. .அதன்படி, 2023 மார்ச் 23ஆம் திகதி போட்டிப்பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், நடைபெறவிருந்த போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டது.இந்த மனுக்கள் தற்போது உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement