• Nov 22 2024

தகாத உறவினால் பறிபோன “மிஸ் ஜப்பான்” மகுடம்..!samugammedia

Tharun / Feb 8th 2024, 6:11 pm
image

கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற “மிஸ் ஜப்பான்” போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.

உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.

உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய “மிஸ் ஜப்பான் சங்கம்”, பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது “மிஸ் ஜப்பான்” பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து கரோலினா, “என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.


தகாத உறவினால் பறிபோன “மிஸ் ஜப்பான்” மகுடம்.samugammedia கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற “மிஸ் ஜப்பான்” போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில், ஷுகன் பன்ஷுன் (Shukan Bunshun) எனும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பை கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய “மிஸ் ஜப்பான் சங்கம்”, பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது “மிஸ் ஜப்பான்” பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து கரோலினா, “என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement