• Jul 09 2025

இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்!

shanuja / Jul 8th 2025, 1:56 pm
image

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம்களில் கட்டபட்ட வீடுகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மாநாடு மூலம் கடந்த திங்கள்கிழமை திறந்து வைத்தார்.



மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் அமைந்துள்ளன.  


கடந்த   2021 ஓகஸ்ட்  இல் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 26 மாவட்டங்களில் 67 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த, புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள வீடுகளை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக  உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி கூடுதலாக, முகாம்களில் அடிப்படை வசதிகளான சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை அரசாங்கம் 7.33 கோடி ரூபாவில் ஆரம்பித்தது. 


மறுவாழ்வுத் திட்டத்தின் முதல் கட்டத்தில், 35 முகாம்களில் 180.34 கோடி ரூபாவில்  மொத்தம் 3,510 வீடுகளைக் கட்ட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுவரை, 18 மாவட்டங்களில் 32 முகாம்களில் மொத்தம் 2,781 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம்களில் கட்டபட்ட வீடுகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மாநாடு மூலம் கடந்த திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள முகாம்களில் அமைந்துள்ளன.  கடந்த   2021 ஓகஸ்ட்  இல் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 26 மாவட்டங்களில் 67 முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த, புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள வீடுகளை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக  உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கூடுதலாக, முகாம்களில் அடிப்படை வசதிகளான சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை அரசாங்கம் 7.33 கோடி ரூபாவில் ஆரம்பித்தது. மறுவாழ்வுத் திட்டத்தின் முதல் கட்டத்தில், 35 முகாம்களில் 180.34 கோடி ரூபாவில்  மொத்தம் 3,510 வீடுகளைக் கட்ட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுவரை, 18 மாவட்டங்களில் 32 முகாம்களில் மொத்தம் 2,781 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement